புதுக்கோட்டை - ஆலங்குடி சாலையில், அசோக் நகர் பகுதியில் அரசு மதுபான கடை எஃப் எல் 2 மதுபான கூடம் திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் அசோக் நகர் பேருந்து நிலையத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் காவல் துறையினர் சாலை மறியல் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. மேலும் மதுபான கடை திறக்க கூடாது என்று கோரிக்கை வைத்துள்ளனர்.