விவசாயிகள் குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் நடைபெற்றது.

விவசாயிகள் குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் நடைபெற்றது.

Update: 2024-09-27 09:33 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
விவசாயிகள் குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் நடைபெற்றது. மாதந்தோறும் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெறுவது வழக்கம். அதன் அடிப்படையில் இன்று இந்த மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன், மாவட்ட கூட்டுறவு சங்க இணை பதிவாளர் கந்தராஜா, வேளாண்துறை அதிகாரிகள், விவசாயிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள் அவரவர் பகுதியில் உள்ள விவசாயம் மேற்கொள்வது தொடர்பாக உள்ள இடர்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியரிடம் புகார் தெரிவித்தனர். மேலும், ஏற்கனவே விவசாயிகள் அளித்த புகார் மனுவுக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டு உரிய நடவடிக்கையும் மேற்கொள்ள உத்தரவிட்டார் மாவட்ட ஆட்சியர் தங்கவேல். தமிழகத்தில் தற்போது ஒரு கோடி பனைமரம் நடுவதற்கான திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து இன்றைய கூட்டத்தில் பங்கேற்ற ஒரு விவசாயி தனது தோட்டத்தில் விளைந்த பனை விதைகளை மாவட்ட ஆட்சியரிடம் மேற்கண்ட திட்டத்திற்காக வழங்கினார். விவசாயி வழங்கிய பனை விதைகளை மாவட்ட ஆட்சியர் தங்கவேல் பெற்றுக் கொண்டு விவசாயிக்கு நன்றி தெரிவித்தார்.

Similar News