துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின் உட்பட அமைச்சர்கள் பதவி ஏற்பு அமைச்சர் மதிவேந்தனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

ஆதிதிராவிடம் நலத்துறை அமைச்சராக பதவியேற்ற ராசிபுரம் சட்டமன்ற உறுப்பினரும், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சருமான மருத்துவர் மா.மதிவேந்தன் முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

Update: 2024-09-29 12:42 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
தமிழ்நாடு அரசு புதிய அமைச்சர்கள் பதவியேற்பு மற்றும் அமைச்சர்கள் இலாகா மாற்றம் செய்யப்பட்டுள்ளது.இதில் தமிழ்நாடு அரசின் துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பதவி ஏற்றார். அதேபோல் புதிய அமைச்சர்களாக செந்தில் பாலாஜி, கோ.வி.செழியன், ராஜேந்திரன், ஆவடி நாசர் ஆகியோரும், இலாக்கா மாற்றும் செய்யப்பட்டுள்ள அமைச்சர்கள் பொன்முடி, மருத்துவர் மா.மதிவேந்தன், கயல்விழி உள்ளிட்டோர் பதவியேற்றனர்.துணை முதல்வராக பதவியேற்ற உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர்களாக பதவி பதவி ஏற்றவர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார். ஆதிதிராவிடம் நலத்துறை அமைச்சராக பதவியேற்ற ராசிபுரம் சட்டமன்ற உறுப்பினரும், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சருமான மருத்துவர் மா.மதிவேந்தன் முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

Similar News