உடுமலை அருகே நெகிழிப் பொருட்களுக்கு எதிராக விழிப்புணர்வு பேரணி
50க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே மானுப்பட்டி பகுதியில் தேவேந்தர குமார் மீனா ஐ.ஃப்.எஸ். துணை இயக்குநர்,ஆனைமலை புலிகள் காப்பகம், அவர்களின் உத்தரவின்படி வனஉயிரின வார விழா நிகழ்வு ஆனைமலை புலிகள் காப்பகம், உடுமலைப்பேட்டை வனச்சரகம், திருப்பூர் வனக்கோட்டம், எண்ணம் போல் வாழ்க்கை அறக்கட்டளை மற்றும் ஆரன்யா அறக்கட்டளை இணைந்து மிதிவண்டி ஊர்வலம் மற்றும் நெகிழிக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் வனச்சரக அலுவலர் மணிகண்டன் தலைமையில் வனவர் நிமல் முன்னிலையில் எண்ணம் போல் வாழ்கை அறக்கட்டளை நிறுவனர் எஸ்.ஏ.ஐ.நெல்சன் மற்றும் ஆர்.ஜி.எம் கல்வி நிறுவனங்களின் மக்கள் தொடர்பு அதிகாரி கார்த்திகேயன் இருவரும் இணைந்து கொடி அசைத்து பேரணியை துவக்கி வைத்தனர். ஆர்.ஜி.எம் மேல்நிலை பள்ளி மற்றும் அமராவதி சைனிக் பள்ளி மாணவ மாணவிகள் 50 மேற்பட்டோர் மிதிவண்டி பேரணியில் கலந்துகொண்டனர். மானுப்பட்டியில் இருந்து ஏழுமலையன் கோவில் பிரிவு வரை சுமார் 6 கீ,மீ தூரம் மிதிவண்டி பேரணி நடைபெற்றது. பின் ஏழுமலையான் கோவில் பிரிவில் மாணவ மாணவிகளுக்கு நெகிழிக்கு எதிரான விழிப்புணர்வும் வனத்தின் முக்கியத்துவத்தையும் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் கையெழுத்து பிரச்சாரம் நடைபெற்றது. உடன் வனத்துறை பணியாளர்கள் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஆம்புலன்ஸ் பணியாளர்கள் உடனிருந்தனர்