வேட்டையன் திரைபட இயக்குனர் மீது காவல் நிலையத்தில் புகார்!
வேட்டையன் திரைப்படத்தில் கோவில்பட்டி அரசு பள்ளி தொடர்பாக இடம்பெற்ற காட்சிக்கு எதிர்ப்பு - இயக்குனர் மீது காவல் நிலையத்தில் புகார்
இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த வேட்டையன் திரைப்படம் நேற்று வெளியானது. அந்த திரைப்படத்தின் தொடக்கத்தில் அரசு பள்ளி மாணவர்கள் குறித்து சில காட்சிகள் இடம் பெற்றிருக்கும். அதில் கோவில்பட்டி காந்தி நகரில் உள்ள அரசு பள்ளி மாணவர்கள் ஆசிரியை படம் பிடித்து, தவறாக சித்தரித்து சமூக வலைதளங்களில் பரப்பியதால் சர்ச்சை என்ற வாசகம் இடம் பெற்றிருக்கும். இந்த காட்சி கோவில்பட்டி மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டுள்ள கோவில்பட்டி காந்தி நகரில் நகராட்சி உயர்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த காட்சிகள் அந்த பள்ளியை சித்தரிப்பதாக இருப்பதால் அதனை நீக்க வேண்டும், திரைப்படத்தின் இயக்குனர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி கோவில்பட்டி சமூக ஆர்வலர் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் ராஜேஷ் கண்ணா என்பவர் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். கோவில்பட்டி காந்தி நகரில் செயல்பட்டு வரும் நகராட்சி உயர்நிலைப்பள்ளி தொடர்ந்து பத்தாம் வகுப்பில் 100% தேர்ச்சி பெற்று வருகிறது. 2009 -2010 ஆண்டில் தமிழகத்தின் சிறந்த அரசு பள்ளியாக அந்த காந்திநகர் நகராட்சி உயர்நிலைப் பள்ளியாக தேர்ந்தெடுக்கப்பட்டு விருது வழங்கப்பட்டது இப்படிப்பட்ட சூழ்நிலையில் வேட்டையன் திரைப்படத்தில் அந்தப் பள்ளியை சித்தரிக்கு வகையில் தவறாக காட்சி இடம் பெற்றுள்ளதால் அதனை நீக்க வேண்டும் என்று அந்த புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.