வானிலை எச்சரிக்கை: தூத்துக்குடி மீனவர்கள் கடலுக்குச் செல்ல தடை!
சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை காரணமாக தூத்துக்குடி மீனவர்கள் நாளை (அக்.16) கடலுக்கு செல்ல வேண்டாம் என மீனவளத்துறை அறிவுறுத்தியுள்ளது.
வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக இன்று(அக். 15) காலை வலுப்பெற்றுள்ளது. மேலும், ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரம் இடையே கரையை நோக்கி நகரக் கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு தெரிவித்துள்ளது. இதையடுத்து தூத்துக்குடியில் மீனவர்கள் நாளை மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது" என்று தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.