நாமக்கல் தினசரி மார்க்கெட்டில் தீபாவளி கொண்டாட்டம்!
காய்கறி வணிகர்கள் மற்றும் சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு புத்தாடைகள் வழங்கி தீபாவளி வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது.
நாமக்கல்- திருச்செங்கோடு சாலை மாநகராட்சி அலுவலகம் அருகில் உள்ள தினசரி மார்க்கெட் காய்கறி வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் தீபாவளி திருநாள் மார்க்கெட் வளாகத்தில் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு சங்க தலைவர் மனோகரன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் சிவக்குமார், விஜி, ராஜா, மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் நாமக்கல் மாவட்ட தலைவர் ஜெயகுமார் வெள்ளையன், காய்கறி வணிகர்கள் மற்றும் சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு புத்தாடைகள் வழங்கி தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்தார். பேரமைப்பின் மாவட்ட செயலாளர் பொன்.வீரக்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.