அருள்மிகு சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சாமி திருக்கோவில் கந்த சஷ்டி சூரசம்காரம்
பிரசித்திபெற்ற பழமை வாய்ந்த அருள்மிகு சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சாமி திருக்கோவில் கந்த சஷ்டி சூரசம்கார நிகழ்வில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்
திருவள்ளூர் பிரசித்திபெற்ற பழமை வாய்ந்த அருள்மிகு சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சாமி திருக்கோவில் கந்த சஷ்டி சூரசம்கார நிகழ்வில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியை அடுத்த சிறுவாபுரியில் அமைந்துள்ள பழைமைவாய்ந்த மிகவும் பிரசித்தி பெற்ற அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் இன்று கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு சூரசம்கார நிகழ்வு திருக்கோவில் முன்பாக நடைபெற்றது கடந்த2 ஆம் தேதி கந்த சஷ்டி விழாவானது கொடி ஏற்றத்துடன் தொடங்கி இன்று முருகப்பெருமான் வேலினை கொண்டு சூரனை வதம் செய்யும் நிகழ்வு நடைபெற்றது மான் யானை உள்ளிட்ட பல்வேறு வடிவங்களில் சூரன் வலம் வந்து பின்னர் மாமரமாய் மாறும் சூரனை சம்ஹாரம் செய்யும் நிகழ்வு வெகு சிறப்பாக நடைபெற்றது இதில் பொன்னேரி கும்மிடிப்பூண்டி சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு முருகப்பெருமானை தரிசனம் செய்தனர். கந்த சஷ்டி விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் மாதவன் கோவில் நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.