புதுக்கோட்டை பேருந்து நிலையத்தில் நேற்று இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில், தமிழ்நாட்டில் உள்ள கல்வி நிலையங்களில் மாணவர் பேரவைத்தேர்தல் நடத்தக்கோரி, கையொப்ப இயக்கம், அதன் மாவட்டச்செயலர் ஆர்.வசந்தகுமார் தலைமையில் நடைபெற்றது. கையொப்ப இயக்கத்தை கந்தர்வகோட்டை எம்எல்ஏ மா.சின்னத்துரை தொடங்கி வைத்தார். இதில் மாணவர் சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினர் கார்த்திகாதேவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.