மோகனூர் அறிவுரு சித்தர் பீடங்களில் ஆறாம் ஆண்டு குருபூஜை!

விநாயகர் வழிபாட்டுடன் துவங்கி திருமகள் திருவிளக்கு பூஜை தமிழ் வேத முறைப்படி மிக விமர்சையாக நடைபெற்றது.

Update: 2024-11-23 14:22 GMT
நாமக்கல் மாவட்டம் மோகனூர் காந்தமலை முருகன் கோவில் எதிரே உள்ள ஐயா கோவில் என்று அழைக்கப்படும் அறிவுரு சித்தர் பீடங்களில் ஆறாம் ஆண்டு குருபூஜை விழா மிக விமர்சையாக நடைபெற்றது. முன்னதாக முதல் நாள் வெள்ளிக்கிழமை இரவு விநாயகர் வழிபாட்டுடன் துவங்கி திருமகள் திருவிளக்கு பூஜை தமிழ் வேத முறைப்படி மிக விமர்சையாக நடைபெற்றது, காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தங்கரர் நிகழ்வும் ஐயா பீடத்தில் மேல் அமைந்துள்ள சிவலிங்கத்திற்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இரண்டாம் நிகழ்வாக சனிக்கிழமை அதிகாலை திருப்பள்ளி எழுச்சி, கோ பூஜை, திரு தாண்டகம் திருமுறை விண்ணப்பம் பேரொளி வழிபாடு உடன் திருக்குட நன் நீராட்டு முடிந்த உடன் சிறப்பு அலங்காரம் பல்வேறு தீப உபசரிப்புடன் மஹா தீபம் காண்பிக்கப்பட்டது இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். முழுவதும் தமிழ் வேத முறைப்படி செந்தமிழ் ஆகம அந்தணர் சிவ வேல்முருகன் தலைமையில் நடைபெற்றன.

Similar News