எடப்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் பணி புறக்கணிப்பு மற்றும் தொடர் உள்ளிருப்பு போராட்டம்
சேலம் மாவட்டம் எடப்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் பணி புறக்கணிப்பு மற்றும் தொடர் உள்ளிருப்பு போராட்டம் நவ 27 தேதி முதல் நடைபெற்று வருகிறது.
எடப்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் பணி புறக்கணிப்பு மற்றும் தொடர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் வருவாய் துறை பணிகள் முடங்கி பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்... தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் சார்பில் வட்டாட்சியர் அலுவலக வளாகங்களில் அலுவலகப் பணியாளர்கள் தமிழ்நாடு முழுவதும் பணிகள் புறக்கணிப்பு மற்றும் தொடர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் . அதன் ஒரு பகுதியாக சேலம் மாவட்டம் எடப்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய்த்துறை பணியிடங்கள் தொடர்ந்து பறிபோகி வருவதாகவும், பணி இடங்களை பாதுகாத்திடவும், தங்களின் கோரிக்கைகள் வென்றிடவும் மூன்றாம் கட்டமாக அலுவலக பணியாளர்கள் பணி புறக்கணிப்பு மற்றும் தொடர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் எடப்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் துறை பணிகள் முடங்கியது. தொடர்ந்து வருவாய் துறை அலுவலர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பொதுமக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றபடாமல் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எடப்பாடி வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் அலுவலக பணியாளர்கள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பணிகள் முடங்கப்பட்டு வருவதோடு பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்ற இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.