ராசிபுரம் அரசு மருத்துவமனையில் சாலை விபத்தில் படுகாயம் அடைந்த நபருக்கு மருத்துவம் பார்த்த அதிமுக முன்னால் அமைச்சர் சரோஜா..
ராசிபுரம் அரசு மருத்துவமனையில் சாலை விபத்தில் படுகாயம் அடைந்த நபருக்கு மருத்துவம் பார்த்த அதிமுக முன்னால் அமைச்சர் சரோஜா..
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி(48)இவர் தனது தங்கை உடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது மலைப்பகுதியில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்துக்குள்ளானார். விபத்தில் பழனிச்சாமிக்கு வலது காலில் பலத்த காயம் ஏற்படவே அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக 108 வாகனம் மூலம் ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது தகவல் அறிந்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர் சரோஜா ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு வந்த நிலையில் அங்கு சிகிச்சையில் இருந்த பழனிச்சாமிக்கு அமைச்சர் சரோஜா மருத்துவம் பார்த்து ஆறுதல் கூறினார். அதனைத் தொடர்ந்து பழனிச்சாமியின் மகன் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதாக கூறிய நிலையில் அமைச்சர் சரோஜா தற்போது தந்தையை சேலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறும், ரத்தப்போக்கு அதிகமாக இருப்பதால் சேலம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்ற பிறகு மேல் சிகிச்சைக்காக கோவை செல்ல வேண்டுமென அறிவுறுத்தினார். தொடர்ந்து சேலம் அரசு மருத்துவமனை டீன் அவர்களிடம் தொலைபேசி மூலமாக அழைத்து உங்களுக்கு தேவையான உதவிகளை செய்ய பரிந்துரை செய்வதாகும், படுகாயம் அடைந்த பழனிச்சாமிக்கு முன்னாள் அமைச்சர் சரோஜா உதவி தொகை வழங்கினார்..