பாலுக்கான கொள்முதல் விலை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் கறவை மாடுகளுடன் ஆர்ப்பாட்டம்..

பாலுக்கான கொள்முதல் விலை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் கரவை மாடுகளுடன் ஆர்ப்பாட்டம்..

Update: 2024-11-29 14:09 GMT
தமிழகம் முழுவதும் நடைபெறக்கூடிய கோரிக்கை ஆர்ப்பாட்டத்தையொட்டி நாமக்கல் மாவட்டம், வெண்ணந்தூர் ஒன்றியம், ஆயிபாளையம் பால் சொசைட்டி முன்பு கறவை மாடுகளுடன் K. ராமசாமி தலைமையில் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பாலுக்கான கொள்முதல் விலை லிட்டர் ஒன்றுக்கு 10 ரூபாய் உயர்த்தி வழங்கி பசும்பாலுக்கு லிட்டர் ஒன்றுக்கு ரூ. 45-ம், எருமை பாலுக்கு லிட்டர் ஒன்றுக்கு ரூ. 54 வழங்க வலியுறுத்தியும், மாட்டு தீவனத்தை 50 சதம் மானிய விலையில் வழங்கிட வலியுறுத்தியும், ஆரம்ப சங்கத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கு சம்பள உயர்வு மற்றும் பணி பாதுகாப்பு வழங்கிடவும், மதுரை உயர்நீதிமன்ற உத்தரவின்படி பாலை கொள்முதல் செய்யும் இடத்திலேயே பாலின் தரத்தையும் அளவையும் கணக்கிட கோரியும், இதர கோரிக்கைகளை வலியுறுத்தியும் கோரிக்கை முழக்கமட்டனர். இதில் பால் உற்பத்தியாளர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் P. பெருமாள், மாவட்ட உதவி செயலாளர் N. ஜோதி ஆகியோர் பங்கேற்றனர்.

Similar News