நாமக்கல் பொன்விழா நகர் அரசு நடுநிலைப் பள்ளிக்கு கூடுதல் கழிவறை கட்டிடம்!-கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் எம்.பி நிதி ஒதுக்கீடு
மாணவர்களின் சுகாதாரத்திற்காக பள்ளி ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்று இராஜேஸ்குமார் எம்.பி கூடுதல் கழிப்பிடம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்வதாக உறுதியளித்தார்.
தமிழ்நாடு துணை முதலமைச்சரும், விளையாட்டுத் துறை அமைச்சரும், மாநில இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு, நாமக்கல் பொன்விழா நகரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பள்ளி குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.அப்போது நலத்திட்ட உதவிகள் வழங்க வந்த நாமக்கல் ஒன்றிய கழக செயலாளரும், அட்மா குழுத் தலைவருமான வி.கே.பழனிவேல் மற்றும் ஒன்றிய பொருளாளர் கணேசன் ஆகியோரிடம் பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் மாணவர்களின் நலன் கருதி கூடுதல் கழிவறை கட்டிடம் தேவை என பள்ளி தலைமை ஆசிரியை அ.யோகலட்சுமி தலைமையில் ஆசிரியர்கள் கோரிக்கை வைத்தனர். ஆசிரியர்களின் கோரிக்கையை நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினரும், நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவருமான கே.ஆர்.என். இராஜேஸ்குமாரிடம் எடுத்துரைத்தனர். இதையடுத்து மாணவர்களின் சுகாதாரத்திற்காக பள்ளி ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்று இராஜேஸ்குமார் எம்.பி கூடுதல் கழிப்பிடம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்வதாக உறுதியளித்தார்.இந்நிகழ்ச்சியின் போது, நாமக்கல் ஒன்றிய கழக செயலாளர் வி.கே.பழனிவேல் மற்றும் ஒன்றிய பொருளாளர் இந்திரா நகர் ச.கணேசன், மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் பா.கிருபாகரன், தலைமை ஆசிரியை அ.யோகலட்சுமி, இடைநிலை ஆசிரியை சோ.செல்வராணி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.