மாடப்பளியில் கோயில் கும்பாபிஷேக விழா

மாடப்பள்ளியில் ஶ்ரீனிவாச பெருமாள் கோயில் கும்பாபிஷேக விழா திரளானோர் பங்கேற்பு;

Update: 2024-12-08 08:15 GMT
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே ஸ்ரீனிவாச பெருமாள் மற்றும் ஆஞ்சநேயர் விநாயகர் திருக்கோயிலின் மஹாகும்பாபிஷேக விழா ஏராளமான பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என்று சாமி தரிசனம். திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த மாடப்பள்ளி கிராமம் அருள்மிகு ஸ்ரீனிவாச பெருமாள் திருக்கோயில் நூதன அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழா நடைபெற்றது. முன்னதாக சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை அன்று காலை மற்றும் மாலை நேரங்களில் யாக வேள்வி அமைத்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றன ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 7 மணி அளவில் மங்கள இசை, 3ஆம் கால யாக வேள்வி பூஜை, அதன் பின்னர் தம்பதிகள் சங்கல்பம் நடைபெற்று 9 மணி அளவில் கோபுரத்தில் உள்ள ஸ்ரீனிவாசா பெருமாள் மற்றும் ஆஞ்சநேயர் விநாயகர் பரிவார தெய்வங்களுக்கு ஒரே நேரத்தில் மஹாகும்பாபிஷேக வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் 1000க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு கோவிந்தா கோவிந்தா என்று சாமி தரிசனம் செய்தனர். இந்நிகழ்ச்சியில் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி அறங்காவலர் குழு செயலாளர் கல்யாணி பழனிசாமி கவுண்டர் மற்றும் கோதண்டன் செல்வி மற்றும் விழாக் குழுவினர்கள் ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர் இறுதியில் கோயில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Similar News