புதுக்கோட்டை மாநகராட்சிக்குட்பட்ட மச்சுவாடி நால்வழிச்சாலையில் இருசக்கர வாகனம் ஓட்டி வந்த இளைஞர்களிடம் தலைக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் தலைக்கவசம் அணியாததால் விபத்துக்கள் ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்படுகிறது. எனவே, வாகன ஓட்டிகளிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினார் காவலர் ரமேஷ் குமார். இதேபோல் பல்வேறு இடங்களிலும் காவல்துறை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.