தென்னிலை அருகே டூவீலர் மீது அரசு பேருந்து மோதி விபத்து பெண் படுகாயம்.

தென்னிலை அருகே டூவீலர் மீது அரசு பேருந்து மோதி விபத்து பெண் படுகாயம்.

Update: 2024-12-09 11:57 GMT
தென்னிலை அருகே டூவீலர் மீது அரசு பேருந்து மோதி விபத்து பெண் படுகாயம். கரூர் மாவட்டம், தென்னிலை அருகே உள்ள பால்வார்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் குமார் வயது 40. இவரது மனைவி கிருபா வயது 31. இவர்கள் இருவரும் டிசம்பர் 4-ம் தேதி மாலை 6-30 மணி அளவில், கரூர் - கோவை சாலையில் அவர்களது டூவீலரில் சென்று கொண்டு இருந்தனர். இவர்களது வாகனம் பால்வார்பட்டி பிரிவு அருகே வந்தபோது, அதே சாலையில் ஈரோடு மாவட்டம், பாசூர் பகுதியைச் சேர்ந்த மகேஷ் குமார் வயது 51 என்பவர் ஓட்டி வந்த அரசு பேருந்து, ரமேஷ் குமார் ஓட்டிச் சென்ற டூவீலரின் பின்னால் மோதி விபத்து ஏற்பட்டது . இந்த விபத்தில் ரமேஷ் குமாருக்கு லேசான காயமும், கிருபாவுக்கு பலத்த காயமும் ஏற்பட்டதால் உடனடியாக கிருபாவை ஈரோடு மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். சம்பவம் தொடர்பாக ரமேஷ் குமார் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், அரசு பேருந்தை வேகமாகவும், கவனக்குறைவாகவும் ஓட்டி, விபத்து ஏற்படுத்திய அரசு பேருந்து ஓட்டுனர் மகேஷ் குமார் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் தென்னிலை காவல் துறையினர்.

Similar News