சாலை விபத்தில் மூதாட்டி உயிரிழப்பு
நாட்றம்பள்ளி பகுதியில் சாலையை கடந்த மூதாட்டி லாரி மோதி உயிரிழப்பு;
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே சாலையை கடக்க முயன்ற மனநல பாதிக்கப்பட்ட பெண் மீது டிப்பர் லாரி மோதி தலை நசிங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு போலீசார் விசாரணை. திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த கே. பந்தாரப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் லட்சுமி (வயது 40) இவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர். இன்று அப்பகுதியில் ஹோட்டலில் உணவு வாங்கிக் கொண்டு சாலையை கடந்துள்ளார் அப்போது டிப்பர் லாரி மோதி பின் சக்கரத்தில் சிக்கி தலை நசுங்கி நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து தொடர்பாக தகவல் அறிந்து விரைந்து சென்ற நாட்றம்பள்ளி காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.