சிறப்பாகப் பணியாற்றிய காவலர்களுக்கு சான்றிதழ்

காவல்துறை

Update: 2024-12-21 13:40 GMT
தஞ்சாவூர் காவல் சரகத்தில் 2024 ஆம் ஆண்டில் சிறப்பாகப் பணியாற்றிய காவல் அலுவலர்கள், காவலர்களுக்கு மத்திய மண்டல காவல் தலைவர் க. கார்த்திகேயன் வெள்ளிக்கிழமை சான்றிதழ் வழங்கினார். தஞ்சாவூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், 2024 ஆம் ஆண்டில் சிறப்பாகப் பணியாற்றிய தஞ்சாவூர் சரகத்துக்கு உட்பட்ட தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களைச் சார்ந்த 57 காவல் அலுவலர்கள், காவலர்களுக்கு மத்திய மண்டல காவல் தலைவர் க. கார்த்திகேயன் சான்றிதழ் வழங்கினார். இதேபோல, தொடர்ந்து சிறப்பாக பணியாற்ற வேண்டும் என காவல் தலைவர் அறிவுரை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் தஞ்சாவூர் சரகக் காவல் துணைத் தலைவர் ஜியா உல் ஹக், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்கள் ஆஷிஷ் ராவத் (தஞ்சாவூர்), எஸ். ஜெயக்குமார் (திருவாரூர்), ஆ.கு. அருண் கபிலன் (நாகை), ஜி. ஸ்டாலின் (மயிலாடுதுறை) உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Similar News