நாகர்கோவில் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 22 வயதான இளம் பெண் கன்னியாகுமரி மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் அளித்துள்ள ஒரு மனுவில் கூறியிருப்பதாவது:- நான் பி டெக் முடித்துள்ளேன். என்னுடன் கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த ஜெயபிரகாஷ் என்பவர் படித்து வந்தார். அவரிடம் நட்புடன் பழகி வந்தேன். இந்த நிலையில் திடீரென ஜெயபிரகாஷ் என்னை தொடர்பு கொண்டு திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று வற்புறுத்தினார். நான் இதற்கு மறுப்பு தெரிவித்ததால் என்னுடைய போட்டோக்கள் வீடியோக்களை மார்பிங் செய்து ஆபாசமாக சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவரிடம் கேட்டபோது அவர் அனைவரும் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ளுங்கள் என எங்களை மிரட்டுகிறார். அவரது தந்தையிடம் புகார் கூறியபோதும் அவரும் தனது மகனை கண்டிக்காமல் எங்களை மிரட்டுகிறார். நாங்கள் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ளும் நிலையில் உள்ளோம். எனவே நடவடிக்கை எடுக்க வேண்டும். என மனுவில் கூறியுள்ளார். இந்த புகாரின் பேரில் குமரி மாவட்ட சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.