எம்ஜிஆர் படத்திற்கு அமமுகவினர் மலர் தூவி மரியாதை.

மதுரை மாவட்டம் மேலூரில் எம்ஜிஆர் படத்திற்கு மாலை அணிவித்து அமமுகவினர் மரியாதை செலுத்தினார்கள்.;

Update: 2024-12-24 06:33 GMT
தமிழக முன்னாள் முதல்வர் MGR அவர்களின் 37 வது நினைவு தினத்தை முன்னிட்டு இன்று 24-12-2024 மேலூர் தொகுதி அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் MGR படம் வைத்து மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.இதில் ஆசையன் சாமி, மேலூர் தொகுதி பொறுப்பாளர் மேலூர் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் சோமாசி, மேலூர் நகர் கழக செயலாளர் நகர் மன்ற உறுப்பினர் ஆனந்த்,மேலூர் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் .சந்திரசேகர்.அ.வள்லாளபட்டி பேரூர் கழக செயலாளர் சோமசுந்தரம் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர பேரூர் ஊராட்சி வார்டு கழக நிர்வாகிகள் மூத்த முன்னோடிகள் சார்பு அணி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Similar News