பாலியல் வன்முறைக்கு எதிரான பிரச்சார பேரணி

நாகை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்;

Update: 2024-12-24 06:56 GMT
நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில், மாவட்ட அளவில் பாலியல் வன்முறைக்கு எதிரான பிரச்சார பேரணியை மாவட்ட ஆட்சியர் ப.ஆகாஷ் நேற்று தொடங்கி வைத்தார். தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவன கூடுதல் இயக்குனர் முத்து மீனா முன்னிலை வைத்தார். பேரணியில், மகளிர் சுய உதவி குழுவினர், பாலியல் வன்முறைக்கு எதிரான வாசகங்களான, குழந்தை திருமணத்தை ஒழிப்போம். குடும்ப வன்முறையை தடுப்போம். குழந்தை தொழிலாளர் முறையை தடுப்போம். பெண் கல்வியை ஊக்குவிப்போம். பாலியல் வன்முறைக்கு எதிராக குரல் கொடுப்போம் உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்திய படியும், கோஷமிட்டபடியும் ஊர்வலமாக சென்றனர். நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து தொடங்கிய பேரணி, வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன் முடிவடைந்தது. முன்னதாக, பாலியல் சமத்துவ உறுதி மொழியான, ஆண் குழந்தைகளையும், பெண் குழந்தைகளையும் எவ்வித பாகுபாடும் இன்றி சமமாக வளர்ப்போம் என பாலியல் வன்முறைக்கு எதிரான பிரச்சார உறுதி மொழியை மாவட்ட ஆட்சியர் தலைமையில் அனைவரும் எடுத்துக் கொண்டனர். பேரணியில், மகளிர் திட்ட இயக்குனர் முருகேசன், உதவி திட்ட அலுவலர்கள், மகளிர் சுய உதவி குழுவினர் மற்றும் அரசு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

Similar News