பேராவூரணி சேது சாலை காவல்துறை கண்காணிப்பு அறை செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படுமா...? 

பொது பிரச்சனை;

Update: 2024-12-24 07:24 GMT
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அண்ணா சிலை அருகில் பல ஆண்டுகளாக காவல்துறை கண்காணிப்பு அறை அமைக்கப்பட்டு செயல்படாமல் உள்ளது. இந்தப் பகுதியில் காலை, மாலை நேரங்களில் வாகனப் போக்குவரத்து அதிகம் இருப்பதால் அதை ஒழுங்குப் படுத்துவதற்காக காவலர்கள் பணியில் இருந்து வந்தனர். ஆனால் சில ஆண்டுகளாக கண்காணிப்பு அறைக்கு காவலர்கள் எவரும் வருவதில்லை. இதனால் இந்த கண்காணிப்பு அறை பயனற்று உள்ளது. மேலும், இரவு நேரங்களில் சமூக விரோதிகள் இந்த அறையை தவறாக பயன்படுத்தி வருவதாகவும் கூறுகின்றனர். மேலும், கண்காணிப்பு அறையின் வெளிப்புறத்தில் விளம்பர சுவரொட்டிகள் ஒட்டுவதும், கண்ணீர் அஞ்சலி பிளக்ஸ் போர்டு வைப்பதும் தொடர்ந்து நடந்து வருகிறது.  மேலும், இப்பகுதியில் ( பேரி கார்டு) தடுப்பு கம்பிகள் இல்லாததால் சாலை விதிகளை மீறி குறுக்கும் நெடுக்குமாக வாகனங்கள் செல்கின்றன. இதனால் இப்பகுதியில் அடிக்கடி விபத்துகள் நடந்து வருகிறது.  எனவே, பயனற்று இருக்கும் இந்த காவல்துறை கண்காணிப்பு அறையை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வந்து விதியை மீறிச்செல்லும் வாகனங்களை கண்டுபிடித்து அவர்களை எச்சரித்து, விபத்தில்லாமல் போக்குவரத்து நடைபெற, சம்மந்தப்பட்ட துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக  ஆர்வலர் ஏ.எஸ்.ஏ.தெட்சிணாமூர்த்தி கேட்டுக் கொண்டுள்ளார்.

Similar News