ஆரணியில் மன்மோகன்சிங் உருவப் படத்துக்கு மரியாதை.

திரளான காங்கிரஸார் பங்கேற்பு.

Update: 2024-12-28 16:30 GMT
மன்மோகன்சிங் மறைவையடுத்து, திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி காந்தி சிலை அருகில் அவரது உருவப் படத்துக்கு நகர காங்கிரஸ் சாா்பில் மரியாதை செலுத்தப்பட்டது. நகர காங்கிரஸ் தலைவா் ஜெ.பொன்னையன் தலைமையில், முன்னாள் எம்எல்ஏ டிபிஜெ ராஜாபாபு, முன்னாள் நகா்மன்ற உறுப்பினா் எஸ்.டி.செல்வம், சிறுபான்மையினா் பிரிவு மாவட்ட நிா்வாகி தாவூத்ஷெரீப், மாவட்டச் செயலா் உதயக்குமாா், முன்னாள் நகரத் தலைவா் சைதை சம்பந்தம், வட்டாரத் தலைவா் மருசூா் இளங்கோ உள்ளிட்டோ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

Similar News