திராட்சை பழம் கொண்ட அலங்காரத்தில் ஆதி சிவன்.
மதுரையில் திராட்சை பழம் கொண்டு ஆதி சிவனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
மதுரை தவிட்டு சந்தை பந்தடி 5வது தெருவில் உள்ள ஸ்ரீ ஆதிசிவன் கோவிலில் இன்று (டிச.28) மாலை சனி பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்ற பின்பு திராட்சைப்பழம் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன. இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். வந்திருந்த பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.