போச்சம்பள்ளி வாரச்சந்தையில் இன்று பூசணிக்காய் அமோக விற்பனை.
போச்சம்பள்ளி வாரச்சந்தையில் இன்று பூசணிக்காய் அமோக விற்பனை.
வரும் தைப்பொங்கலை எதிர்நோக்கி போச்சம்பள்ளியில் வாரச்சந்தையில் பொன் நிறமான பூசணிக்காய் அமோக விற்பனை போச்சம்பள்ளி பகுதிகளில் மானாவாரி நிலங்களில் விவசாயிகள் பொன் நிறமான பூசணிக்காய் விதை நடவு செய்யப்பட்டு தற்போது பூசணிக்காய்கள் முற்றிய நிலையில் தற்போது அறுவடை செய்து வரும் நிலையில் இன்று நடந்த போச்சம்பள்ளி வார சந்தையில் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் பூசணிக்காய்களை கொண்டு வந்து விற்பனைக்கு குவித்து வைத்துள்ளனர். மேலும் இன்று மலிவான விலையில் விற்பனை செய்யப்பட்டது. மேலும் அடுத்த வாரம் கூடுதல் விலைக்குப் போகும் என்ற கருத்தில் கொண்டு பொதுமக்கள் ஆர்வத்துடன் பூசணிக்காய் வாங்கிச் சென்றனர்.