புதுக்கோட்டை மாவட்டம் நாகுடி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனைக்கு செல்லும் வழித்தடத்தில் குடிதண்ணீர் பைப் உடைந்து சாலை முழுவதும் நீர் நிரம்பி உள்ளது. இதனால் சாலையில் உள்ள பள்ளம் பெரிதாக உள்ளதால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகிறார்கள். பாதசாரிகள் கடப்பதற்கு மிகவும் சிரமப்படுகிறார்கள். எனவே உடனடி நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.