சேலம் மத்திய மாவட்ட தி.மு.க. சார்பில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாட்டம்
சுற்றுலா துறை அமைச்சர் ராஜேந்திரன் தகவல்
சேலம் மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளரும், சுற்றுலாத்துறை அமைச்சருமான ராஜேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- பொங்கல் பண்டிகையை சேலம் மத்திய மாவட்டம் முழுவதும் மாநகரம், ஒன்றிய, பேரூர், ஊராட்சிகளில் கட்சி கொடியேற்றி சமத்துவ பொங்கல் விழாவாக கொண்டாட வேண்டும். மேலும், தி.மு.க. இளைஞரணி செயலாளரும், துணை முதல்-அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விளையாட்டு போட்டிகள் நடத்தி அதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கியும் பொங்கல் விழாவை கொண்டாட வேண்டும். வருகிற 14-ந் தேதி ஓமலூர் மற்றும் சேலம் வடக்கு சட்டமன்ற தொகுதிகளில் கட்சி கொடியேற்றுதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அன்றைய தினம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தாரமங்கலம் கிழக்கு ஒன்றியம் பகுதியிலும், 15-ந் தேதி கன்னங்குறிச்சி பேரூராட்சி அஸ்தம்பட்டி பகுதி, குமாரசாமிப்பட்டி பகுதி, செவ்வாய்பேட்டை, அரிசிபாளையம், பொன்னம்மாபேட்டை மற்றும் ஓமலூர் தெற்கு ஒன்றியம் பகுதியிலும் கட்சி கொடியேற்றி விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படுகிறது. 11-ந் தேதி கொண்டலாம்பட்டி, குகை, தாதகாப்பட்டி, மெய்யனூர், சூரமங்கலம், அழகாபுரம், காடையாம்பட்டி கிழக்கு, மேற்கு ஒன்றிய பகுதியிலும், 12-ந் தேதி கிச்சிப்பாளையம், அம்மாப்பேட்டை, சேலம் வடக்கு ஒன்றியம், ஓமலூர் வடக்கு, கிழக்கு ஒன்றியம் பகுதிகளிலும் பொங்கல் விழா நடக்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.