சங்கரன்கோவிலில் திமுக கட்சியின் பாகமுகவர் ஆலோசனை கூட்டம்
திமுக கட்சியின் பாகமுகவர் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் ரயில்வே பீட்டர் சாலைகள் அமைந்துள்ள திமுக மாவட்ட அலுவலகத்தில் வைத்து தென்காசி வடக்கு மாவட்ட பொருளாளர் இல,சரவணன் தலைமையில் சங்கரன்கோவில் வடக்கு ஒன்றிய திமுக பாக முகவருடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முக்கிய வருகின்ற தேர்தல் குறித்தும் முக்கிய தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டது. இந்தக் கூட்டத்தில் சங்கரன்கோவில் வடக்கு ஒன்றிய செயலாளர் வெள்ளத்துரை, தலைமை உறுப்பினர் தேவை என்ற தேவதாஸ், ஒன்றிய கழக அவைத்தலைவர் மோகன்குமார், ஒன்றிய கழகப் பொருளாளர் ரமேஷ் பாண்டியன், ஒன்றிய துணைச் செயலாளர் மாரியப்பன் மற்றும் முருகேசன்,கரிவலம்வந்தநல்லூர் முன்னாள் கிளைச் செயலாளர் தங்கவேல் உள்ளிட்ட ஏராளமான திமுக கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் கலந்து கொண்டனர்.