மதனகோபாலசாமி கோவிலில் பரமபத வாசல் திறப்பு.
மதுரை மதனகோபாலசாமி கோவிலில் பரமபத வாசல் திறக்கப்பட்டது
மதுரை மேலமாசி வீதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ மதனகோபால சுவாமி திருக்கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் எனப்படும் பரமபத வாசல் இன்று (ஜன.10) திறக்கப்பட்டது. அதனை தொடர்ந்து மதனகோபாலசாமி சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா நடைபெற்றது. இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பரமபத வாசல் வழியாக மதனகோபாலசாமி வருகின்ற போது "கோவிந்தா கோவிந்தா" என்று கோஷத்துடன் தரிசனம் செய்தனர்.