கூடுதல் ஆட்சியருக்கான கட்டிட அடிக்கல் நாட்டு விழா
மதுரை மாவட்ட கூடுதல் ஆட்சியர் புதிய அலுவலக கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் விழா இன்று அமைச்சர் தலைமையில் நடைபெற்றது.
மதுரை மாநகர் டி.ஆர்.ஓ காலனியில் கூடுதல் ஆட்சியர், திட்ட இயக்குனர் முகாம் அலுவலகம் மற்றும் குடியிருப்பு கட்டிடங்கள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று (ஜன.10) வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி அவர்கள் தலைமையில் பூமி பூஜையுடன் நடைபெற்றது. இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் சங்கீதா , கூடுதல் ஆட்சியர், ஊரக வளர்ச்சித் துறையைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.