சந்தைப்பேட்டையில் சிசிடிவி கேமரா திறப்பு விழா

சிசிடிவி கேமரா திறப்பு விழா

Update: 2025-01-10 09:47 GMT
திருநெல்வேலி மாவட்டம் சீவலப்பேரி அருகே உள்ள சந்தைப்பேட்டை கிராமத்தில் இன்று ( ஜனவரி 10) சிசிடிவி கேமரா திறப்பு விழா நடைபெற்றது. இந்த திறப்பு விழாவில் சிறப்பு அழைப்பாளராக திருநெல்வேலி ஊரக உட்கோட்டம் துணை காவல் கண்காணிப்பாளர் ரகுபதிராஜா கலந்துகொண்டு சிசிடிவி கேமராவை திறந்து வைத்தார்.இந்த நிகழ்ச்சியில் சீவலப்பேரி காவல் உதவி ஆய்வாளர் நாஞ்சில், சந்தைப்பேட்டை ஜமாத் தலைவர் கோதர் ஷா, கவுன்சிலர் குமரேசன் மற்றும் ஊர் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்‌.

Similar News