தத்தனூர் மீனாட்சி ராமசாமி பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாட்டம்.

தத்தனூர் மீனாட்சி ராமசாமி பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

Update: 2025-01-10 10:54 GMT
அரியலூர்.. ஜன.10- தத்தனூர் மீனாட்சி ராமசாமி பள்ளியில்  சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்து உடையார்பாளையம் அருகே தத்தனூர் மீனாட்சி ராமசாமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, மீனாட்சி ராமசாமி மேல்நிலைப்பள்ளி, மீனாட்சி ராமசாமி வித்யாலயா (CBSC) மெரிட் காலேஜ் ஆப் எஜுகேஷன் உள்ளிட்ட  பள்ளி கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா நேற்று கொண்டாடப்பட்டது. விழாவுக்கு பள்ளியின் தாளாளர் எம் ஆர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கி சர்க்கரை, வெண் பொங்கல் வைத்து பள்ளி குழந்தைகள், மாணவ மாணவியர் ஆசிரியர்களுடன் சேர்ந்து குளவையிட்டு வழிபட்டனர். நிகழ்ச்சியில் பள்ளி குழந்தைகள் மற்றும் மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். சூரிய பகவானை வழிபட்ட பின்பு பள்ளி தாளாளர் எம்.ஆர்.பாலசுப்பிரமணியன் குழந்தைகளுக்கு பொங்கல் ஊட்டி மகிழ்ந்தார். குழந்தைகளும் ஆர்வத்துடன் பொங்கலை ஊட்டிக்கொண்டனர். அதனைத் தொடர்ந்து  நடைபெற்ற விழாவில் பள்ளி குழந்தைகள் மாணவ மாணவிகள் நடனமாடி அசத்தினர். முன்னதாக மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர் சிவகுமார் வரவேற்று பேசினார். முடிவில் சிபிஎஸ்சி பள்ளி முதல்வர் கார்த்திக்ராஜா நன்றி தெரிவித்தார்.

Similar News