பெரம்பலூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

சமத்துவ பொங்கல் விழாவில் பொங்கல் கரும்புகள் வழங்கப்பட்டது.

Update: 2025-01-10 10:54 GMT
பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் சமத்தவப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. நம் தமிழர் திருநாள் பொங்கல் விழா ஏன் கொண்டாடுகிறோம் என்பது குறித்து பள்ளி தலைமையாசிரியர் திருமலைச்செல்வி மாணவர்களுக்கு புரியும் வண்ணம் மிக அழகாக விளக்கமளித்தார்கள். சிறப்பு விருந்தினர்களாக பெரம்பலூர் வட்டார கல்வி அலுவலர் ஜோதிலட்சுமி, வட்டார வள மைய மேற்பார்வையாளர் தேவகி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாரதிதாசன், ஆசிரியர் பயிற்றுநர்கள் கலைவாணன் , குணசேகரன், ரமேஷ், ரமேசு ஆகியோர் கலந்து கொண்டு * குழந்தைகளுக்கு பொங்கல், கரும்பு வழங்கி குழந்தைகளை மகிழ்வித்தனர் . நிகழ்ச்சியில் பெரம்பலூர் (கிழக்கு)ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் பள்ளியில் பயிலும் சாதாரண மாணவர்கள், உள்ளடக்கிய கல்வி மையம், ஆரம்ப கால பயிற்சி மையத்தில் பயிற்சி பெறும் மாற்றுத்திறன் கொண்ட சிறப்பு குழந்தைகள் என 30 குழந்தைகள் தங்களது பெற்றோருடன் கலந்துகொண்டனர்.

Similar News