நகை அடகு பிடிப்போர் சங்கம் இணைப்பு விழா

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் நாமக்கல் மாவட்ட தலைவர் ஜெயகுமார் வெள்ளையன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு நகை அடகு பிடிப்போர் கூட்டமைப்பின் செயல்பாடுகள் மற்றும் வளர்ச்சி குறித்து பேசினார்

Update: 2025-01-10 11:13 GMT
தமிழ்நாடு நகை அடகு பிடிப்போர்கள் கூட்டமைப்புடன் மோகனூர் தாலுகா நகை அடகு பிடிப்போர் சங்கம் இணையும் இணைப்பு விழா மோகனூரில் நடைபெற்றது.விழாவிற்கு மோகனூர் தாலுகா நகை அடகு பிடிப்போர் சங்கத்தின் தலைவர் மதி தலைமை வகித்தார்.செயலாளர் சுப்பிரமணி வரவேற்புரை நிகழ்த்தினார்.தமிழ்நாடு நகை அடகு பிடிப்போர்கள் கூட்டமைப்பின் மாநில தலைவர் கந்தன், பொதுச் செயலாளர் அன்பழகன் முன்னிலையில் நடைபெற்ற இவ்விழாவில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் நாமக்கல் மாவட்ட தலைவர் ஜெயகுமார் வெள்ளையன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு நகை அடகு பிடிப்போர் கூட்டமைப்பின் செயல்பாடுகள் மற்றும் வளர்ச்சி குறித்து பேசினார்.
பேரமைப்பின் மாவட்ட பொருளாளர் சீனிவாசன்,மோகனூர் அனைத்து வணிகர் சங்கத்தின் தலைவர் நடராஜன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.விழாவில் மோகனூர் அனைத்து வணிகர் சங்கத்தின் துணை தலைவர் சோமசுந்தரம், பேரமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சேந்தை கோபாலகிருஷ்ணன்,மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் எவரெஸ்ட் ராஜா,மாநகர இளைஞரணி துணை அமைப்பாளர் சிவக்குமார் மற்றும் மாநில கூட்டமைப்பின் கொள்கை பரப்பு செயலாளர் மணமேடு பிரபாகரன் உள்ளிட்ட பரமத்தி வேலூர், முசிறி, தொட்டியம், மணப்பாறை, திருச்சி நகர நிர்வாகிகள் திரளாக கலந்துகொண்டு சிறப்பித்தனர். விழா முடிவில் மோகனூர் தாலுகா சங்க பொருளாளர் யோகேஷ் நன்றி கூறினார்.

Similar News