நாமக்கல்லில் மூன்றாம் ஆண்டு புத்தகத் திருவிழா, மாவட்ட ஆட்சியர் தகவல்.
மூன்றாம் ஆண்டு மாபெரும் நாமக்கல் புத்தக திருவிழா 1.2.2025 முதல் 10.2.2025 வரை 10 நாட்கள் நடைபெற உள்ளது. நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மருத்துவர் ச.உமா, தகவல்.
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று மாவட்ட ஆட்சியர் தலைமையில் நாமக்கல் (தெற்கு) அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறவுள்ள மாபெரும் புத்தக திருவிழா-2025 முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது, நாமக்கல் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில் மூன்றாம் ஆண்டு மாபெரும் ”புத்தக திருவிழா” நாமக்கல் (தெற்கு) அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் வருகின்ற 1.2.2025 முதல் 10.2.2025 வரை 10 நாட்கள் நடைபெறவுள்ளது. இப்புத்தக திருவிழாவானது பல்வேறு அரங்குகள், ஆளுமைகளின் சொற்பொழிவுகள், பட்டிமன்றம், குழந்தைகளுக்கான பொழுது போக்கு அம்சங்கள், உணவுத் திருவிழா, கலைநிகழ்ச்சிகள், போட்டிகள், அறிவியல் கோளரங்கம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுடன் சிறப்பாக நடைபெறவுள்ளது. மேலும், மருத்துவ முகாம், உணவு அரங்குகள் ஆகியவை இடம் பெறவுள்ளன. இப்புத்தக திருவிழா சிறப்பாக நடைபெற அனைத்து அரசுத்துறை அலுவலர்களும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை செவ்வென செய்திட வேண்டும்.இப்புத்தகத் திருவிழாவானது பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் பயன்பெறும் வகையில் நடைபெறவுள்ளது. எனவே, இந்த அறிய வாய்ப்பினை அனைவரும் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என மாவட்ட மருத்துவர் தெரிவித்தார்.முன்னதாக, குடியரசு தின விழா சிறப்பாக கொண்டாடுதல் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மருத்துவர் ரெ.சுமன், திட்ட இயக்குநர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சு.வடிவேல், திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) கு.செல்வராசு, வருவாய் கோட்டாட்சியர் ஆர்.பார்தீபன் (நாமக்கல்), சே.சுகந்தி (திருச்செங்கோடு), தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) ச.பிரபாகரன், முதன்மை கல்வி அலுவலர் ப.மகேஸ்வரி, மாவட்ட நூலக அலுவலர் தேன்மொழி உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.