பயனாளிகள் நிறைந்த மனதோடு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தனர்.
நிறைந்தது மனம்” தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் பெற்ற நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த பயனாளிகள் நிறைந்த மனதோடு நன்றி !
தமிழ்நாடு முதலமைச்சர் ஏழை, எளிய மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்திடும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகின்றார்கள். பொதுமக்கள் அரசு அலுவலகங்களை தேடி தங்களது கோரிக்கை மனுக்களை வழங்கி வந்த நிலையில், பொதுமக்களை தேடி அனைத்து துறை அரசு அலுவலர்களும் அவர்களது கிராமங்களுக்கே சென்று கோரிக்கைகளை நிறைவேற்றிட மாதம் ஒரு முறை மக்கள் தொடர்பு திட்ட முகாமினை நடத்திட உத்தரவிட்டுள்ளார்கள். அதன்படி இன்றைய தினம் மோகனூர் வட்டம், தோளூர் கிராமத்தில் நடத்தப்பட்டு வருகிறது. தொடர்ந்து, மக்கள் தொடர்பு திட்ட முகாமில், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டம் சார்பில் 2 பயனாளிகளுக்கு ரூ.2,000/- மதிப்பில் ஊட்டச்சத்து பெட்டகங்கள், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 2 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.12,300/- மதிப்பில் உதவி உபகரணங்கள், 2 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.5,560/- மதிப்பில் காதொலிக்கருவிகள், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் 4 நபர்களுக்கு ரூ.1.68 இலட்சம் மதிப்பில் நிதி உதவி, வேளாண்மை துறை சார்பில் 2 விவசாயிகளுக்கு ரூ.963/- மதிப்பில் நலத்திட்ட உதவிகள், 1 விவசாயிக்கு ரூ.5,992/- மதிப்பில் முதலமைச்சரின் மன்னுயிர் காத்து மண்ணுயிர் காப்போம் திட்டத்தின் கீழ் நலத்திட்ட உதவிகள், வேளாண் பொறியியல் துறை சார்பில் 5 விவசாயிகளுக்கு ரூ.9.98 இலட்சம் மதிப்பில் வேளாண் கருவிகள், மகளிர் திட்டம் சார்பில் 11 நபர்களுக்கு ரூ.13.00 இலட்சம் மதிப்பில் சமுதாய முதலீட்டு நிதி உதவி, வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் 11 நபர்களுக்கு ரூ.6.83 இலட்சம் மதிப்பில் தொழில் கடனுதவி, தோட்டக்கலைத்துறை சார்பில் 5 பயனாளிகளுக்கு ரூ.2.09 இலட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள், முன்னோடி வங்கி சார்பில் 3 நபர்களுக்கு ரூ.3.51 இலட்சம் மதிப்பில் கடனுதவி, 25 நபர்களுக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு அட்டைகள், தொழிலாளர் நலத்துறை சார்பில் 6 நபர்களுக்கு ரூ.36,200/- மதிப்பில் நலத்திட்ட உதவிகள், வருவாய்த்துறை சார்பில் 19 நபர்களுக்கு ரூ.4.23 இலட்சம் மதிப்பில் இயற்கை மரண உதவித்தொகை, 18 நபர்களுக்கு ரூ.49,500/- மதிப்பில் கல்வி உதவித்தொகண்ணன் நபருக்கு ரூ.8,000/- மதிப்பில் திருமண உதவித்தொகை, 8 நபர்களுக்கு குடும்ப அட்டைகள், 9 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா, 24 பயனாளிகளுக்கு மனைவரி தோராய பட்டா, 46 பயனாளிகளுக்கு நத்தம் பட்டா மாறுதல் ஆணைகள், கூட்டுறவு துறை சார்பில் 20 விவசாயிகளுக்கு ரூ.23.88 இலட்சம் மதிப்பில் கால்நடை பராமரிப்பு கடன் மற்றும் பயிர்க்கடன், தாட்கோ சார்பில் 57 தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ காப்பீட்டு அட்டைகள் என மொத்தம் 319 பயனாளிகளுக்கு ரூ.66.40 இலட்சம் அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார். லட்சுமி நிறைந்தது மனம் நிகழ்ச்சியில் தெரிவித்ததாவது, என் பெயர் லட்சுமி நாங்கள் மோகனூர் வட்டம், மணியங்கால்பட்டியில் வசித்து வருகிறோம். என் கணவர் கூலித்தொழில் செய்து வருகிறார். எங்களுக்கு இரண்டு குழந்தைகள். எனது முதல் குழந்தை 4 ஆம் வகுப்பு படித்து வருகிறான். எனது இரண்டாவது குழந்தை பெயர் சஞ்சய் வயது 8. எனது இரண்டாவது குழந்தைகளுக்கு சிறுவயது முதல் சரியாக காது கேட்பது இல்லை. அங்கன்வாடி மையம் சென்று கொண்டிருந்த போது அங்கு வந்திருந்த மருத்துவர்கள் தான் என் குழந்தையை பரிசோதித்து அவனுக்கு காது கேட்பதில்லை என தெரிவித்தார்கள். அதன் பிறகு நாங்கள் சேலம் அரசு மருத்துவமனைக்கு சென்று அறுவை சிகிச்சை செய்து சரி செய்து விடலாம் என பரிசோதித்தோம். அங்கு மருத்துவர் அறுவை சிகிச்சை ஏதும் வேண்டாம். காதொலி கருவி பொருத்தினால் போதும் என்று தெரிவித்தார்கள். இப்போது என் மகன் கடந்த 2 வருடமாக மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு பேச்சு பயிற்சி அளிக்கும் நியூ லைப் சிறப்பு பள்ளியில் பயின்று வருகின்றான். இப்போது பேச முயற்சி செய்து வருகிறான். தற்போது மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் காதொலி கருவி வழங்கி உள்ளார்கள். இது என் குழந்தைக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். என் மகனுக்கு மாதம் ரூ.1,500/- உதவித்தொகையும் வழங்கி வருகின்றார்கள். எங்களை போன்று மாற்றுத்திறனாளி குழந்தைகளின் பெற்றோரின் நிலை கருதி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வரும் தமிழ்நாடு முதலமைச்சர் ஐயா அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என தெரிவித்தார். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் விவசாயிகளின் நலன் கருதி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றார்கள். அதன்படி, விவசாயிகளுக்கு டிராக்டர்கள், பவர்டில்லர்கள் மற்றும் பவர் வீடர்கள் மானியத்தில் வழங்கப்பட்டு வருகிறது. நடப்பாண்டில் இதுவரை டிராக்டர்கள் முதல் தவணையாக 14 எண்களும், இரண்டாம் தவணையாக 5 எண்களும் ஆக மொத்தம் 19 எண்கள் ரூ.79.411 இலட்சம் மானியத்திலும், பவர்டில்லர்கள் மற்றும் பவர் வீடர்கள் முதல் தவணையாக 34 எண்கள் ரூ. 26.00 இலட்சம் மானியத்திலும், இரண்டாம் தவணையாக பவர்டில்லர்கள் மற்றும் பவர் வீடர்கள் 53 எண்கள் ரூ.43.24 எண்கள் மானியத்திலும் என மொத்தம் 87 எண்கள் ரூ.69.24 இலட்சம் மானியத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.