யார் அந்த சார்? என்ற வாசகத்தை இருசக்கர வாகன மற்றும் நான்கு சக்கர வாகனங்களை ஒட்டி அதிமுகவினர் திமுக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை ஆர்ப்பாட்டம்
யார் அந்த சார்? என்ற வாசகத்தை இருசக்கர வாகன மற்றும் நான்கு சக்கர வாகனங்களை ஒட்டி ஒன்றிய செயலாளர் தோப்பூர் முருகன் தலைமையிலான அதிமுகவினர் திமுக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.*
காரியாபட்டி முக்குரோடு பகுதியில், அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் யார் அந்த சார்? என்ற வாசகத்தை இருசக்கர வாகன மற்றும் நான்கு சக்கர வாகனங்களை ஒட்டி ஒன்றிய செயலாளர் தோப்பூர் முருகன் தலைமையிலான அதிமுகவினர் திமுக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். தமிழகத்தில் புகழ்பெற்ற அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் சீண்டலுக்கு ஆளான விவகாரத்தில் யார் அந்த சார்? என்ற கேள்வியை முன்வைத்து அதிமுகவினர் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி முக்குரோடு பகுதியில்,அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் திமுக அரசுக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக காரியாபட்டி கிழக்கு ஒன்றிய கழகச் செயலாளர் தோப்பூர் முருகன் மற்றும் நகரச் செயலாளர் விஜயன் ஆகியோர் இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் யார் அந்த சார்? என்ற வாசக ஸ்டிக்கர்களை ஒட்டினர். மேலும் அதிமுகவினர் அனைவரும் தங்கள் சட்டையில் யார் அந்த சார்? என்ற பேட்ஜ்களை அணிந்து விளம்பர மாடல் திமுக அரசுக்கு எதிராக யார் அந்த சார்? என்று கோஷங்களை எழுப்பி தங்களது கண்டனத்தை பதிவு செய்தனர். இந்நிகழ்ச்சியில், காரியாபட்டி கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இருந்து கிளைக் கழக செயலாளர்கள், பிறஅணிச் செயலாளர்கள், கிழக்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.