மல்லூர் வீ.ஜி. விகாஸ் பப்ளிக் பள்ளியில் பொங்கல் விழா கொண்டாட்டம்..
மல்லூர் வீ.ஜி. விகாஸ் பப்ளிக் பள்ளியில் பொங்கல் விழா கொண்டாட்டம்..
மல்லூர் வீ.ஜி. விகாஸ் பப்ளிக் பள்ளியில் பொங்கல் விழா வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. மாணவ, மாணவிகளின் கண்கவர் நடனம் நிகழ்த்தப்பட்டது. பள்ளி ஆசிரியைகளால் புதுப் பானையில் பச்சரிசியிட்டு பொங்கல் வைக்கப்பட்டது. ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களால் உறியடிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளி முதல்வர் கணேஷ் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையின் வரலாறு மற்றும் சிறப்பு குறித்து மாணவர்களுக்கு உரையாற்றினார். பள்ளி முதன்மை செயல் அலுவலர் திருநாவுக்கரசு,நிர்வாக அலுவலர் வினோத்குமார் ஆகியோர் ஆசிரியர்களுக்கும் பெற்றோருக்கும் மாணவர்களுக்கும் பொங்கல் வாழ்த்து கூறினார்கள்.