போச்சம்பள்ளியில் கொப்பரை விலை உயர்வு.
போச்சம்பள்ளியில் கொப்பரை விலை உயர்வு.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி ஒழுங்குமுறை விற்பனை கூடம் மற்றும் வேளாண்மை விற்பனை கூடத்தில், கொப்பரை ஏலம் நேற்று நடந்தது. போச்சம்பள்ளி அதன் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள பாரூர், சந்தூர், புலியூர் நாகரசம்பட்டி, காவேரிப்பட்டணம் உள்பட தென்பெண்ணை ஆற்றுப்படுகை பகுதியிலிருந்து கொப்பரை உற்பத்தியாளர்கள் திரளாக பங்கேற்றனர். இதில், கொப்பரை கிலோ அதிகபட்சமாக 146.80 ரூபாய்க்கு வரை ஏலம் போனது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.