குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு..

கூட்டுறவு சங்கத்தின் கீழ் செயல்பட்டு வரும் நியாய விலை கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்வை மாவட்ட கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர் மேலும் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு தொகப்பினை வழங்கினர்.

Update: 2025-01-10 17:54 GMT
திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் அடுத்த கோவில்வெண்ணி பகுதியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தின் கீழ் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பான செங்கரும்பு சர்க்கரை பச்சரிசி உள்ளிட்ட பொருட்கள் வழங்குவதினை நேரில் பார்வையிட்டு ஆய்வு மாவட்ட கண்காணிப்பு அலுவலர் / கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளர் ப.காயத்ரி கிருஷ்ணன், மாவட்ட ஆட்சித்தலைவர் தி.சாருஸ்ரீ பொங்கல் பரிசு தொகுப்பினை பொதுமக்களுக்கு வழங்கினார்கள். இவ்ஆய்வில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் புஹாரி, மன்னார்குடி வருவாய் கோட்டாட்சியர் யோகேஸ்வரன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் சித்ரா வேளாண்மைதுறை இணை இயக்குநர் பாலசரஸ்வதி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ஹேமா ஹெப்சிபா நிர்மலா உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

Similar News