மீனவர் நல வாரிய உறுப்பினர் சேர்க்கை முகாம்
திண்டுக்கல் அருகே மீனவர் நல வாரிய உறுப்பினர் சேர்க்கை முகாம்
திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் மீனவர் நலவாரிய உறுப்பினர் சேர்க்கை முகாம் மீன்வள உதவி இயக்குனர் ஜனார்த்தனம் தலைமையில் நடைபெற்றது மீன்வள ஆய்வாளர் ஞானசுந்தரி வரவேற்புரை ஆற்றினார். இந்த முகாமில் நல வாரிய உறுப்பினர் விண்ணப்பம் மற்றும் கிசான் கிரெடிட் கார்டு சம்பந்தப்பட்ட விண்ணப்பங்கள் உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டது. இதில் மீன்வள மேற்பார்வையாளர் கார்த்திக்,கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் பாலமுருகன், சிவபிரசாத், பாலகிருஷ்ணாபுரம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ரேவதி நாகராஜ், ஊராட்சி செயலர் சுரேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.