ஒசூா் அருகே நகரப் பேருந்தை சிறை பிடித்து மாணவா்கள் மறியல்.
ஒசூா் அருகே நகரப் பேருந்தை சிறை பிடித்து மாணவா்கள் மறியல்.
ஒசூா் -பேரிகை சாலை புனுகன்தொட்டி உள்ளிட்ட 15-த்திற்கும் மேற்பட்ட கிராம பள்ளி மாணவா்கள், தொழிலாளா்கள் தினமும் ஓசூருக்கு வருகின்றனர். இந்த நிலையில் நகரப் பேருந்தானது. கடந்த ஒரு மாதமாக சரியான நேரத்தில் வருவதில்லை என்று இதனைக் கண்டித்து,பள்ளி மாணவா்கள் புனுகன்தொட்டி கிராமத்தில் அரசுப் பேருந்தை சிறை பிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனா். பபோலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதில் மாணவர்கள் கலைந்து சென்றனர்.