தென்காசியில் பக்தர்களுக்கு சாலை விதிகள் குறித்து விழிப்புணர்வு

பக்தர்களுக்கு சாலை விதிகள் குறித்து விழிப்புணர்வு

Update: 2025-01-11 02:14 GMT
தென்காசி மாவட்டத்திலிருந்து தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு பாதயாத்திரை மூலமாக செல்லும் பக்தர்களின் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் வழங்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு S.அரவிந்த் அவர்களின் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு சாலை விதிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு ஒருவர் பின் ஒருவராக சாலையின் ஓரமாக நடந்து செல்ல வேண்டும் எனவும், தங்களின் உடைமைகளை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் செங்கோட்டை காவல் ஆய்வாளர் திரு பாலமுருகன் அவர்கள் தலைமையிலான காவல்துறையினர் செங்கோட்டையிலிருந்து திருச்செந்தூருக்கு பாதயாத்திரையாக செல்லும் பக்தர்களுக்கு தகுந்த அறிவுரைகள் வழங்கியதுடன் பாதயாத்திரை பெரும்பாலும் இரவு நேரத்தில் சாலையோரமாக நடந்து செல்வதால் விபத்துக்கள் ஏற்படாத வண்ணம் பாதயாத்திரை செல்லும் 50க்கும் மேற்பட்ட நபர்களின் பைகளில் சிகப்பு நிற ஒளிரும் ஸ்டிக்கர்களை ஒட்டி தகுந்த அறிவுரைகள் வழங்கி அனுப்பி வைத்தார். காவல்துறையினரின் இச்செயல் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.

Similar News