பல்லி விழுந்த உணவை சாப்பிட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதி.

பொங்கல் விழாவில் பல்லி விழுந்த உணவை சாப்பிட்ட 50 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி.

Update: 2025-01-11 03:56 GMT
பொங்கல் விழாவில் பல்லி விழுந்த உணவை சாப்பிட்ட 50 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி. செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் ஒன்றியம் புத்தமங்கலம் கிராமத்தில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவின் போது சமைக்கப்பட்ட உணவில் பல்லி விழுந்துள்ளது. இந்த உணவை 50- க்கும் மேற்பட்டோர் உணவை அருந்தியுள்ளனர். மேலும் உணவை சாப்பிட்ட பொதுமக்கள் பள்ளி மாணவர்கள் மயக்கம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அருகே உள்ள கயப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். மேலும் பள்ளி மாணவர்கள் பொது மக்களுக்கு எந்த பாதிப்பும் இன்றி மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பி உள்ளனர. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

Similar News

தேரோட்டம்