திண்டிவனம் தாலுகா அலுவலகத்தை விவசாயிகள் சங்கம் முற்றுகை
தாலுகா அலுவலகத்தை விவசாயிகள் சங்கம் முற்றுகை;
திண்டிவனம் தாலுகா அலுவலகத்தை, விழுப்புரம் மாவட்ட தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் திடீரென முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.பெஞ்சல் புயலால் திண்டிவனம் பகுதியில் பாதிக்கப்பட்ட பயிர்களின் புள்ளி விவரங்களை வருவாய்த்துறையினர் காலம் தாழ்த்தாமல் வழங்க வேண்டும், ரெட்டணை வயல்வெளி சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.கீழ்நெமிலி கிராமத்தில் வயல்வெளி சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முற்றுகையிட்டனர். சங்கத்தின் கிழக்கு மாவட்ட செயலாளர் சந்திரபுரபு தலைமையில் நடந்த போராட்டத்தில் 50க்கு மேற்பட்ட விவசாயிகள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.போலீசார் தலையிட்டதின் பேரில், முற்றுகையிட்ட விவசாய சங்கத்தினர் தலைமையிடத்து துணை தாசில்தார் ஆறுமுகத்திடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.