நள்ளிரவில் பரபரப்பு

போன் பேசிக் கொண்டிருந்தவரை கற்களால் தாக்கிய 5 பேர் கைது

Update: 2025-01-11 06:37 GMT
ஈரோடு, மாமரத்துபாளையம், அம்மன் நகர், 2வது வீதியைச் சேர்ந்தவர் லோகநாதன் (41). இவர், நேற்று நள்ளிரவு 12.10 மணியளவில் எல்லப்பாளையத்தில் இருந்து மாமரத்து பாளையம் செல்லும் ரோட்டில் உள்ள அரசு பள்ளி அருகில் தனது காரை நிறுத்திவிட்டு போன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த 5 வாலிபர்கள், லோகநாதனின் காரின் முன்னாள் நின்று பாட்டு பாடியுள்ளனர். அதற்கு, லோகநாதன் ஏன் எனக்கு முன்னால் வந்து இப்படி செய்கிறீர்கள் ? எனக் கேட்டுள்ளார். அதற்கு அவர்கள் 5 பேரும், அப்படித்தான் பாட்டு பாடுவோம் எனக் கூறியதுடன் லோகநாதனை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளனர். இதையஎடுத்து லோகநாதன் அவர்களிடம், இவ்வாறு செய்தால் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிப்பேன் என கூறியுள்ளார். இதனால் அத்திரமடைந்த அவர்கள் 5 பேரும் கீழே கிடந்த கற்களை எடுத்து லோகநாதனை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் லோகநாதனுக்கு கண், காது, முதுகு, கை, கால் உள்ளிட்ட பகுதிகளில் காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, தாக்குதலில் ஈடுபட்ட 5 பேரும் லோகநாதனுக்கு கொலை மிரட்டல் விடுத்து, அங்கிருந்து ஆட்டோவில் ஏறி சென்று விட்டனர். அதன்பின், லோகநாதன் ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தொடர்ந்து, அவர் அளித்த புகாரின் பேரில் ஈரோடு வீரப்பன் சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து, லோகநாதனை கற்களால் தாக்கிய பெரிய அக்ரஹாரம், ராஜி செட்டியார் வீதியைச் சேர்ந்த ஹரி கிருஷ்ணன் (19), பெரிய சேமூர், எல்லப்பாளையம் தெற்கு, நாடார் வீதியைச் சேர்ந்த ரோஹித் (24), பெரிய சேமூர், மாகாளியம்மன் கோயில் வீதியைச் சேர்ந்த பிரபு (19), மாமரத்துபாளையம், அம்மன் நகரை சேர்ந்த ஹரி கிருஷ்ணன் (21), எல்லப்பாளையம், நாடார் வீதியைச் சேர்ந்த கவுதம் (24) ஆகியோரை நேற்று இரவு கைது செய்தனர்.

Similar News