சீமானை கைது செய்யக்கோரி டிஎஸ்பி இடம் புகார் மனு
சீமானை கைது செய்ய வலியுறுத்தி தாராபுரம் காவல் துறை துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் திமுக வழக்கறிஞர் அணி சார்பில் புகார் மனு
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் திமுக வழக்கறிஞர் அணி சார்பில் துணைக் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு நேற்று அளிக்கப்பட்டது. இதில் திருப்பூர் தெற்கு மாவட்ட வழக்கறிஞர் அணி தலைவர் செல்வராஜ் தலைமையில் புகார் மனு அளிக்கப்பட்டது. மேலும் தந்தை பெரியார் அவர்களைப் பற்றி கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மிகவும் அசிங்கப்படுத்துகின்ற வகையில் பெரியார் தன் வாழ்க்கையில் சொல்லாத விஷயங்களை எல்லாம் அவர் சொன்னார் என்பது போல அவதூறு பரப்புகின்ற வகையில் பாரதிய ஜனதா கட்சி ஆர் எஸ் எஸ் போன்ற சங்கிகளுக்கு பி டீம் ஆக செயல்பட்டு பெரியாரை பற்றி தரக்குறைவாக அவதூறு தெரிவிக்கும் வகையில் செய்திகளை திட்டமிட்டு பேசி வந்திருக்கிறார். எனவே அந்த சீமானை கண்டிக்கின்ற வகையில் தாராபுரம் திராவிட முன்னேற்றக் கழக வழக்கறிஞர் அணியும் பெரியார் பற்றாளர்களும் சேர்ந்து தாராபுரம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் சுரேஷ் குமார் அவரிடம் வழக்கு பதிவு செய்யக்கோரி புகார் அளித்துள்ளோம். சீமானுடைய பேச்சினால் தமிழ்நாட்டிலே மத கலவரம் ஜாதி கலவரம் அமைதிக்கு சட்டம் ஒழுங்கு பாதிக்கின்ற வகையில் அமைதிக்கு குந்தகம் ஏற்படுகின்ற வகையில் சூழ்நிலை ஏற்படுகின்ற காரணத்தினால் சீமான் அவர்களை தமிழ்நாட்டிலே எங்குமே பிரச்சாரம் செய்ய முடியாத அளவிற்கு திராவிட முன்னேற்றக் கழக தலைவர் தளபதி அரசு நடவடிக்கை எடுக்கும் தளபதி அவர்களை கேட்டு பின்னால் போராட்டங்கள் அறிவிக்கப்படும் எனவும் அதற்கு முன்பாக சீமானை கைது செய்ய வலியுறுத்தி புகார் மனு அளித்துள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் இந்நிகழ்ச்சியில் திருப்பூர் தெற்கு மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் ஐயப்பன், நீதிமன்ற அமைப்பாளர் ராஜேந்திர பாபு மணிவண்ணன், கிருஷ்ணகுமார், உதயச்சந்திரன், சிவக்குமார் மற்றும் தாராபுரம் திமுக வழக்கறிஞர் அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.