நாகை மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் வெளியிட்டுள்ள ஒரு செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள முதன்மை கூட்டரங்கத்தில், சமையல் எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 27 -ம் தேதி மாலை 4.30 மணியளவில் மாவட்ட வருவாய் அலுவலர் பேபி தலைமையில் நடைபெற உள்ளது. கூட்டத்தில், நாகை மாவட்டத்தை சேர்ந்த சமையல் எரிவாயு முகவர்கள் கலந்து கொண்டு, தங்கள் குறைகளை தெரிவித்து பயன்பெறலாம் இவ்வாறு அவர் கூறியுள்ளார்.