நாம் தமிழர்கட்சியினர் இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்.

2024 நாடாளுமன்றத் தேர்தலில் 8.22% வாக்கு விழுக்காடு பெற்றதையடுத்து, நாம் தமிழர் கட்சியை தமிழ்நாட்டின் அங்கீகரிக்கப்பட்ட மாநிலக் கட்சியாக நேற்று அறிவித்துள்ளது.

Update: 2025-01-11 10:25 GMT
பெரம்பலூர் மாவட்ட நாம் தமிழர்கட்சியினர் இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம் : கடந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலில் 8.22% வாக்கு விழுக்காடு பெற்றதையடுத்து, நாம் தமிழர் கட்சியை தமிழ்நாட்டின் அங்கீகரிக்கப்பட்ட மாநிலக் கட்சியாக நேற்று அறிவித்துள்ளது இந்தியத் தேர்தல் ஆணையம். இதனைத்தொடர்ந்து அக்கட்சியின் பெரம்பலூர் மேற்கு மாவட்ட நாம் தமிழர் கட்சியின் சார்பாக, பெரம்பலூர் மேற்கு மாவட்ட செய்தித்தொடர்பாளர் சத்தியசீலன் மற்றும் பெரம்பலூர் கிழக்கு மாவட்ட பொருளாளர் வழக்கறிஞர். கீர்த்திவாசன் ஆகியோர் தலைமையில் பெரம்பலூர் புதிய பேருந்துநிலையத்தில், இன்று (ஜன-11) பொதுமக்களுக்கு இனிப்புகள் லழங்கி கொண்டாடும் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் பெரம்பலூர் நடுவண் தொகுதி செயலாளர் சிவநேசன், துணைச்செயலாளர் அரவிந்த், செய்தித்தொடர்பாளர் அஜித்குமார் மற்றும் பெரம்பலூர் கிழக்கு மாவட்டத்திற்குட்பட்ட தொகுதிப்பொறுப்பாளர் மனோகரன் ஆகியோர் பங்கேற்றனர்.

Similar News